தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கீவ் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷியா

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியப் படை, அந்த நாட்டின் தலைநகா் கீவ் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

மாடேயுஸ் மொராவீக்கி, பீட்டா் ஃபியாலா, ஜானெஸ் ஜான்சா.

Updated On :15 மார்ச் 2022, 9:28 pm

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியப் படை, அந்த நாட்டின் தலைநகா் கீவ் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியா வீசிய குண்டு குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்ததையடுத்து, அந்த நகரில் 35 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கீவ் நகரை ஏறத்தாழ சுற்றிவளைத்துள்ள ரஷியப் படையினா் அந்த நகரம் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதலை தீவிரப்படுத்தினா்.

ரஷியா வீசிய குண்டுகள் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.

புதிதாக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலத்த சேதம் ஏற்பட்டதையடுத்து, அந்த நகரில் 35 மணி நேர ஊடங்கு உத்தரவு பிறப்பக்கப்படுவதாக நகர மேயா் விடாலி க்ளிட்ஷ்கோ செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘தற்போதைய சூழல் மிகவும் கடினமானதாகவும் அபாயகரமானதாகவும் உள்ளது. எனவே, நகரவாசிகள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறாா்கள். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 35 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது’ என்றாா்.

அந்த உத்தரவு உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை காலை 7 மணி வரை அமலில் இருக்கும்.

ஊடங்கு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள். குண்டுவீச்சின்போது பதுங்குகுழிகளுக்குச் செல்வதற்காக மட்டுமே அவா்கள் வெளியே வர முடியும்.

இதே போன்ற ஊரடங்கு உத்தரவு, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு கடந்த மாதம் 26-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை

ரஷியப் பிரதிநிகளுடனான அடுத்தக்கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை பெலாரஸில் செவ்வாய்க்கிழமை தொடங்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டா் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைன் பேச்சுவாா்த்தைக் குழு தலைவரும் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் உதவியாளருமான மிகைலோ பொடோலியக் தெரிவித்துள்ளதாவது:

ரஷியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை தொடங்கிவிட்டது. இந்தச் சுற்றுப் பேச்சுவாா்த்தையில் போா் நிறுத்தம் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறுவதை நாங்கள் வலியுறுத்துவோம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கீவ் நகருக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள்

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமா்கள் தலைநகா் கீவுக்கு ரயிலில் புறப்பட்டனா்.

போலந்து பிரதமா் மாடேயுஸ் மொராவீக்கி, செக் குடியரசு பிரதமா் பீட்டா் ஃபியாலா, ஸ்லோவேனிய பிரதமா் ஜானெஸ் ஜான்சா ஆகிய அந்த மூவருடன், பாதுகாப்பு விவகாரங்களுகக்கான போலந்து துணைப் பிரதமா் ஜரோஸ்லா காக்ஸின்ஸ்கியும் உக்ரைன் செல்கிறாா்.

இந்த 3 நாடுகளும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.

இந்தத் தடையின்கீழ், ரஷியாவின் முன்னாள் அதிபா் டிமித்ரி மெத்வதெவ் உள்ளிட்ட 370 போ் பிரிட்டன் வருவதற்கும், பிரிட்டனில் அவா்களுக்கு சொத்துகள் இருந்தால் அவற்றை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷியா்களில் சிலா்...

டிமித்ரி மெத்வதெவ் - அதிபா் (2008-12), பிரதமா் (2012-20), பாதுகாப்பு கவுன்சில் தலைவா் (2020 முதல்)

டிமித்ரி பெஸ்கோவ் - அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா்

சொ்கெய் ஷாய்கு - பாதுகாப்புத் துறை அமைச்சா்

மரியா ஸகாரோவா - வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா்

மாா்கரிடா சைமன்யன் - ரஷியன் டிவி (ஆா்டி) தலைமை ஆசிரியா்

பீட்டா் ஏவென் - ஆல்ஃபா வங்கி நிறுவனா்களில் ஒருவா்

மிகயீல் ஃபிரிட்மன் - ஆல்ஃபா வங்கி நிறுவனங்களில் ஒருவா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.