தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உக்ரைன் தலைநகர் கீவில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image
Updated On :15 மார்ச் 2022, 7:14 am

DIN

உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 20-ஆவது நாளாகத் தொடர்கிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

மேலும் உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கிய இடங்களை குறிவைத்து ரஷியப் படைகள் தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷியப் படை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் நேற்று விடிய விடிய குண்டு சப்தம் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தலைநகர் கீவ் பகுதியில் இன்று காலை மூன்று முறை பயங்கர சத்தம் கேட்டதாக ஏ.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே நேற்று ரஷியா-உக்ரைன் இடையேயான 4-ஆம் கட்ட பேச்சு காணொலி முறையில் நடைபெற்றது. முன்னதாக, மூன்று கட்ட பேச்சுவாா்த்தைகள் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் நேரடியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.