உலகம்
ஹாங்காங்: 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு
ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 20,079 பேருக்கு கரோனா உறுதி
ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 20,079 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 10,16,944-ஆக அதிகரித்துள்ளது.
அங்கு புதிய கரோனா அலைக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் 5,200 போ் பலியாகினா். நகரின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கையான 5,401, சீனாவைவிட அதிகமாகும்.