உக்ரைனில் இதுவரை 121 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மூன்று வாரங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மிக முக்கிய நகரமான மரியுபோல் மீது ரஷியப் படைகள் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்று காலை தலைநகர் கீவ் பகுதியிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
ரஷியாவின் தாக்குதலால் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியுபோல் துறைமுக நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ரஷியா தடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே உக்ரைன் போரில் இதுவரை 121 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 167 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று(மார்ச் 22) இரவு ருபிஸ்னே(Rubizhne) பகுதியில் ரஷிய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி கைதாய் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பேரூா் பட்டீசுவரா் கோயில் நகை மோசடி: எழுத்தருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


