2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: பைடன் எச்சரிக்கை

ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

News image
கடந்த மார்ச் 18 ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் பைடன் காணொலி வழி உரையாடியபோது...
Updated On :25 மார்ச் 2022, 3:34 am

DIN

உக்ரைன் போரில் ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷியாவின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், 

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் வருத்தம் தெரிவிக்கலாம். ஏனெனில் சீனாவின் எதிர்கால பொருளாதாரம் மேற்கு நாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பது சீனாவுக்கு நன்றாகவே தெரியும். 

உக்ரைன் போரில் ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் 

நான் அவரை அச்சுறுத்தவில்லை, தெளிவுபடுத்துகிறேன். ரஷியாவிற்கு உதவினால் ஏற்படும் விளைவுகளை அவர் புரிந்துகொண்டுள்ளார். அதனை நான் உறுதி செய்தேன்' என்றார். 

ரஷியாவுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு பைடன் தொடர்ந்து சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த மார்ச் 18 ஆம் தேதி பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் காணொலி வழியாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.