சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு வேண்டும்; மோடிக்கு நன்றி' - ரணில் விக்ரமசிங்க

மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 மே 2022, 6:08 am

DIN

மோசமான பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் உதவியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையையடுத்து பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க (73) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று(வியாழக்கிழமை) பிற்பகல் பதவியேற்ற நிலையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'மக்களுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் வழங்குவதற்காக இந்த பொருளாதார நெருக்கடி பிரச்னையை தீர்க்க விரும்புகிறேன்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நான் செய்ய வேண்டிய வேலையை கண்டிப்பாக செய்வேன்".

அதிபர் கோத்தயபய ராஜபட்சவின் அலுவலகத்திற்கு அருகே கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அது தொடர்ந்து அனுமதிக்கப்படும். போராட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவேன்' என்றும் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.