நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கை வன்முறை: ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை

இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிராக போராடியவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை குறித்து  மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 மே 2022, 1:25 pm

DIN

இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிராக போராடியவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை குறித்து  மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை இலங்கை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி நிகல் தல்துவா கூறியதாவது, “ மூன்று முன்னாள் அமைச்சர்கள் சிபிஐ  அதிகாரிகளால் இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அவர்களது சக நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை வருகிற மே 25ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் சம்பந்தப்பட்ட 1059 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அமைதியாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டியதற்காக அரசியல்வாதிகள் சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 9ஆம் தேதி  எதிர்த்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.