இஸ்ரேல் பிரதமர் தேர்தல்: கருத்து கணிப்பில் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலை 

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் கருத்துகணிப்பில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் உள்ளார். 
பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் கருத்துகணிப்பில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் உள்ளார். 

இஸ்ரேலில் மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 61 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியைத்த தேசிய ஒற்றுமை கூட்டணியிலிருந்து ஒரு பெண் எம்பி விலகிய நிலையில் ஆட்சி கவிழ்ந்தது. 

இதனால் 2025ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றுள்ளது. 

கருத்து கணிப்பு முடிவுகளின்படி பெஞ்சமின் நெதன்யாகு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுவார் என்றும், அவரைத் தொடர்ந்து யையார் லபிட் இரண்டாம் இடத்திலும், தீவிர தேசிய மத சியோனிசம் கட்சியின் இதமர் பென்-க்விர் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com