எலான் மஸ்க்
எலான் மஸ்க்

பாதியாகக் குறையும் ட்விட்டர் பணியாளர்கள் எண்ணிக்கை? எலான் மஸ்க் திட்டம்

புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின்  பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Published on

புகழ்பெற்ற சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின்  பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் ரூ.352000 கோடிக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் டிவிட்டர் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாகக் குறைக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள 7400 பணியாளர்களில் 3700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையையும் அவர் திரும்பப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com