

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் நிறுவனத்திலிருந்து கடந்த சில மாதங்களாக மொத்தம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி பயனர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் இதுவரை 45 ஆயிரம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 87 ஆயிரத்திற்கும் மேல் உள்ள மெட்டா நிறுவனத்தின் கீழ் உள்ள வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் பெற்ற பாகிஸ்தான் வெள்ளம்
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பணியாற்றும் 3700க்கும் மேற்பட்ட பணியாளர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.