மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நிலவுக்கு ராக்கெட்: இன்று அனுப்புகிறது நாசா

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (நவ. 16) செயல்படுத்தவிருக்கிறது.

News image
Updated On :15 நவம்பர் 2022, 10:00 pm

DIN

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதன்கிழமை (நவ. 16) செயல்படுத்தவிருக்கிறது.

‘ஆா்டமிஸ்-1’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான இந்த ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.