ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்தியாவிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

உக்ரைன் மீதான போா் நெருக்கடி காரணமாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தார். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது.


ஜி 20 நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது இந்தியர்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20   கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வோம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com