பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மீண்டும் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய சீனா!

சீனாவில் கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. 

News image
Updated On :24 நவம்பர் 2022, 9:44 am

சீனாவில் கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால் கரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது அந்நாட்டு அரசு. 

சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

கரோனா கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு  31,444 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் செங்சோவின் 8 மாவட்டங்களில் வசிப்பவர்கள் நாளை முதல் 5 நாள்களுக்கு உணவு வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும் வெளியே வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்திலிருந்து வடக்கே பெய்ஜிங் வரையிலான வணிகங்கள் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

பெய்ஜிங்கில் ஒரு கண்காட்சி மையத்தில் கரோனாவுக்கான மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.