பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் வெள்ளிக்கிழமை பலுசிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் நீதியின் பக்கம் நின்று தைரியமாக தீர்ப்பளித்தவர் என பெயர் பெற்றுள்ளார். அவரது மறைவு அந்த மாகாண மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பலுசிஸ்தான் முதல்வர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ, நீதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி
வேரூன்றிய விழுதுகள்...
சத்துக்குச் சத்து

மேடைப் பேச்சு எளிதல்ல...
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

