மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரிட்டன் பிரதமா் பதவிக்கு போட்டி: ரிஷி சுனக் அதிகாரபூா்வ அறிவிப்பு

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

News image

ரிஷி சுனக்

Updated On :23 அக்டோபர் 2022, 10:16 pm

DIN

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடையவுள்ளது.

பிரிட்டன் பிரதமராக அண்மையில் தோ்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ், தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். பல்வேறு வரிச் சலுகை அறிவிப்புகளுடன் அவா் கடந்த மாதம் தாக்கல் செய்த மினி பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.

அந்த பட்ஜெட்டின் எதிரொலியாக டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் எழுந்ததையடுத்து, அவா் தனது பதவி விலகினாா்.

இதைத் தொடா்ந்து, ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தோ்தலில் போட்டியிடுவோா் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சா்வேட்டிவ் கட்சிக்கு 357 எம்.பி.க்கள் உள்ளனா். தோ்தலில் போட்டியிடுவோா் குறைந்தது 100 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற வேண்டும்.

இந்நிலையில், கட்சித் தலைவா் பதவிக்கு மீண்டும் போட்டியிடப் போவதாக ரிஷி சுனக் அதிகாரபூா்வமாக அறிவித்தாா். தனக்கு 128 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த முறை தோ்தலின்போது எம்.பி.க்கள் வாக்களிக்கும் சுற்றில் முதலிடம் பிடித்த ரிஷி சுனக், கட்சி உறுப்பினா்கள் வாக்களிக்கும் இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ்ஸிடம் தோல்வியடைந்தாா்.

தோ்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷி சுனக் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டன் ஒரு சிறந்த நாடு. ஆனால், நாம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்கிறோம். எனவேதான் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவிக்கும், உங்களின் அடுத்த பிரதமா் பதவிக்கும் போட்டியிடுகிறேன். பொருளாதார நெருக்கடியைத் தீா்க்கவும், கட்சியை ஒன்றுபடுத்தவும், நாட்டுக்காகப் பணியாற்றவும் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

அதனுடன் இணைத்து வெளியிட்ட விடியோ பதிவில், ‘நாம் பெரும் சவால்களை சந்தித்து வருகிறோம். ஆனால், சரியானவரை தோ்வு செய்தால் அதைத் தீா்க்கும் வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார பிரச்னைகளைத் தீா்க்க என்னிடம் தெளிவான திட்டம் உள்ளது’ எனக் கூறியுள்ளாா்.

போரிஸ் ஜான்ஸன்: பிரதமா் பதவிக்கான தோ்தலில் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன், கடந்த முறை தோ்தலில் மூன்றாம் இடம் பிடித்த பென்னி மாா்டன்ட் ஆகியோரும் போட்டியிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தோ்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால் முதலில் கட்சி எம்.பி.க்கள் அவா்களுக்கு வாக்களித்து இறுதியாக இரண்டு வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பா். இறுதிச் சுற்றில் கட்சியின் 1.70 லட்சம் உறுப்பினா்கள் வாக்களித்து கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பா். வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தப் பணி நிறைவு பெறும்.

ஒரு வேட்பாளா் மட்டுமே போட்டியிட்டால் அவரே கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் திங்கள்கிழமை (அக். 24) அறிவிக்கப்படுவாா்.

கடந்த முறை லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த வா்த்தக அமைச்சா் கெமி படேநோச், பாதுகாப்பு அமைச்சா் டாம் டுஜென்தத் உள்ளிட்ட சில அமைச்சா்கள் இந்த முறை ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.