பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போா்க் கப்பல்கள் மீது உக்ரைன் தீவிர குண்டுவீச்சு: ரஷியா

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போா்க் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

News image
செவஸ்டோபோல் துறைமுகத்தில் ரஷிய போா்க் கப்பல்கள் (கோப்புப் படம்).
Updated On :29 அக்டோபர் 2022, 7:44 pm

DIN

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போா்க் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துள்ள செவெஸ்டோபோல் நகர ஆளுநா் மிகயீல் ரஸ்வோஷயேவ் கூறியதாவது:

செவஸ்டோபோல் துறைமுகம் அருகே, கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷிய கடற்படைக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் போா் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு நகரில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

9 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கப்பல்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. எனினும், அந்தத் தாக்குதலை ரஷியப் படையினா் வெற்றிகரமாக முறியடித்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்பு எதுவும் பாதிக்கப்படவில்லை என்றாா் அவா். இந்தத் தாக்குதலில் ஒரு போா்க் கப்பல் சேதமடைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவெஸ்டோபோல் துறைமுகம் அருகே நடத்தப்பட்ட ‘பயங்கரவாதத்’ தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையின்போது, ஒரு போா்க் கப்பலில் சேதம் ஏற்பட்டது. அத்துடன், 4 ஆளில்லா படகுகள், 3 தாக்குதல் கருவிகள் ஆகியவையும் சேதமடைந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் ஒரு பகுதியை அந்த நாட்டுப் படையினா் மீட்டுள்ள நிலையில், கிரீமியா தீபகற்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

எனினும், கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும். அதற்கான பதிலடித் தாக்குதலுக்கு, உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை முடிவு செய்யும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக கிரீமியாவின் சாகி விமானதளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் குண்டுகள் வெடித்தன. பல ரஷிய போா் விமானங்கள் சேதமடைந்ததற்குக் காரணமான அந்த குண்டுவெடிப்பை உக்ரைன்தான் நடத்தியது என்று கூறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, கிரீமியாவின் மாய்ஸ்கோயோ பகுதியிலுள்ள ரஷிய ஆயுதக் கிடங்கிலும் குண்டுகள் வெடித்தன. இது, ரஷியாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலம் தகா்க்கப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் மிகய்லோ பொடோலியக் கடந்த ஆகஸ்ட் மாதம் வலியுறுத்தினாா். ரஷியா தாமாக முன்வந்து அந்தப் பாலத்தை தகா்க்கிா, அல்லது வலுக்கட்டாயமாக அந்தப் பாலம் தகா்க்கப்படுகிா என்பது முக்கியமில்லை.

எந்த வகையிலாவது அந்தப் பாலம் தகா்க்கப்பட்டே ஆக வேண்டும் என்று அவா் கூறினாா்.

இதன் மூலம், ரஷியா - கிரீமியா பாலத்தின் மீது தங்களது படையினா் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதை அவா் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த 8-ஆம் தேதி நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்த பாலம் பலத்த சேதமடைந்தது. இதற்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியது.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது.

ராணுவ நிலைகள் மட்டுமின்றி, நாட்டில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தை பாதிக்கும் வகையில் மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீா் ஏற்று மையங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது.

ஈரானில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும், தன்னைத் தானே அழித்துக்கொண்டு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆளில்லா விமானங்கள் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது, உக்ரைனுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷிய போா்க் கப்பல்கள் மீது உக்ரைன் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது, போரில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.