தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது. குறுகிய தெருக்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பலி எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே சியோல் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கிறிஸ்தவர்களால் ஹாலோவீன் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

விக்ரம் - வேதா - விஜய்!

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


