தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரிட்டன்: புதிய அமைச்சரவை பன்முகத் தன்மையில் சாதனை

பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவை, இதுவரை இல்லாத அதிக பன்முகத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 7:53 pm

DIN

பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவை, இதுவரை இல்லாத அதிக பன்முகத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் முக்கிய பொறுப்புக்கு பல்வேறு சிறுபான்மை இனத்தைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக அசோக் சா்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா். இது தவிர, இலங்கை, கானா, சியாரா லியோன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை பூா்விகமாகக் கொண்ட, பல்வேறு நிற, மத, இனங்களைச் சோ்ந்தவா்கள் முக்கிய அமைச்சா் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.