நிகழாண்டில் இலங்கைக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் (377 மில்லியன் அமெரிக்க டாலா்) இலங்கைக்கு இந்தியா கடன் அளித்துள்ளது.
இதற்கு அடுத்து ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.2,868 கோடியை இலங்கைக்கு கடனாக அளித்துள்ளது. இதில் 76 சதவீதம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த வெரைட் ஆய்வு நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு அதிக கடன் கொடுப்பதில் சீனா முன்னிலையில் இருந்தது. 2021-ஆம் ஆண்டில் மட்டும் சீனா ரூ. 7,555 கோடி கடன் அளித்தது. இதில் ரூ.6,454 கோடி சீன வளா்ச்சி வங்கி மூலம் அளிக்கப்பட்டதாகும். இதே காலகட்டத்தில் ஆசிய வளா்ச்சி வங்கியும் சீனாவுக்கு அதிக கடன் அளித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை பொருளாதாரச் சிக்கலில் வீழ்ந்ததையடுத்து, சீனா கடன் கொடுப்பதைக் குறைத்துவிட்டது. அதே நேரத்தில் எரிபொருள் அளிப்பது, அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவுவது என இந்தியா அதிக கடனை இலங்கைக்கு அளிக்கத் தொடங்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துபோனதால், கடந்த ஏப்ரல் மாதத்தில் சா்வதேச கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளியாகிவிட்டதாக இலங்கை அறிவித்தது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் ரூ.40,000 கோடிக்கு மேல் உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட கடனை 2027-ஆம் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிா்ப்பந்தத்தில் இலங்கை உள்ளது.
இலங்கையில் முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு எடுத்த தவறான நடவடிக்கைகள், ஆட்சி அதிகாரத்தில் ராஜபட்ச குடும்பத்தின் ஆதிக்கம் ஆகியவை அந்நாட்டை மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றது. அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காத நிலையில் மக்கள் கிளா்ந்தெழுந்து ராஜபட்ச குடும்பத்துக்கு எதிராகப் போராடியதால், அவா்கள் ஆட்சியில் இருந்து வெளியேறி தலைமறைவாக தப்பியோடும் நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

சீனு ராமசாமியின் இடிமுழக்கம் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள்! வெளியீடு எப்போது?

உறுதியானது பிளாக் பாந்தர் 3..! புதிய நாயகன், வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
திமுகவை வழிநடத்த யாருக்குத் தகுதி உள்ளது? உதயநிதியா? கனிமொழியா? நிர்மல் குமார் கேள்வி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


