FOLLOW US

ON GOOGLE DISCOVER

மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

உறுதியானது பிளாக் பாந்தர் 3..! புதிய நாயகன், வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மார்வெல் யுனிவர்ஸில் உருவாகும் பிளாக் பாந்தர் 3 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

புதிய நாயகனை அறிவித்த பிளாக் பாந்தர் 3 படக்குழு. - படம்: ஏபி

Updated On :26 ஜூலை 2026, 1:35 pm IST

ரியான் கூக்லர் இயக்கத்தில் பிளாக் பாந்தர் 3 திரைப்படம் உருவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிளாக் பாந்தராக புதிய நாயகனாக டேவிட் ஜான்சன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் முதல்முறையாகக் கருப்பின சூப்பர் ஹீரோவாக பிளாக் பாந்தர் திரைப்படம் கடந்த 2018-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

பிளாக் பான்தர்: வகாண்டா ஃபாரெவர் என்ற இதன் இரண்டாம் பாகம் 2022-இல் வெளியாகியது. இந்தப் படம் 859 மில்லியன் டாலர் வசூலித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்திய மதிப்பில் ரூ. 8,295 கோடி வசூலித்தது.

பிளாக் பாந்தர் படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மென் புற்றுநோயினால் 2020-ல் இறந்ததால் கதையை மாற்ற வேண்டியிருந்ததாக இயக்குநர் ரியான் கூக்லர் முன்பொரு நேர்காணலில் கூறியுள்ளார்.

மூன்றாவது பாகத்தையும் ரியான் கூக்லர் இயக்குகிறார். லெடிஷியா ரைட் ஸ்ருதியாகவும் வின்ஸ்டன் டியூக் எம்பாகு கதாபாத்திரத்திலும் பிளாக் பாந்தராக டேவிட் ஜான்சனும் நடிக்கவிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் நடிகரான டேவிட் ஜான்சன் கடைசியாக தி லாங் வாக், வேஸ்ட்மேன் படங்களில் நடித்துள்ளார். அடுத்தாண்டு தி சாபேரோப்னெஸ் படம் வெளியாகவிருக்கிறது.

பிளாக் பாந்தர் 3 திரைப்படம் 2028ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தாண்டு இறுதுயில் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

‘Black Panther 3’: David Jonsson to Play T’Challa’s Son as December 2028 Release Date Set

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.