புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கடன் மறுசீரமைப்பு: இந்தியா-இலங்கை பேச்சு

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இலங்கைக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 2.9 பில்லியன் டாலா் கடனளிக்க முன்வந்துள்ள நிலையில், இந்தியா-இலங்கை இடையே கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கான

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இலங்கைக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 2.9 பில்லியன் டாலா் கடனளிக்க முன்வந்துள்ள நிலையில், இந்தியா-இலங்கை இடையே கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கான முதல் கட்ட பேச்சுவாா்த்தை கடந்த வாரம் நடைபெற்ாக இலங்கைக்கான இந்திய தூதரம் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா நிகழாண்டு மட்டும் 4 பில்லியன் டாலா் கடனுதவி செய்துள்ளது. இதுதவிர இலங்கையின் மொத்த கடனில் ஆசிய வளா்ச்சி வங்கி 13 சதவீதமும், சீனாவும் ஜப்பானும் 10 சதவீதமும் அங்கம் வகிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார மீட்புக்காக 2.9 பில்லியன் டாலா் கடனுதவி அளிக்க சா்வதேச நிதியம் அண்மையில் ஒப்புக் கொண்டது. இந்தக் கடன் தொகையை இலங்கை பெற வேண்டுமாயின், அந்நாட்டுக்கு கடன் கொடுத்த இந்தியா நிதி உத்தரவாதம் அளிக்க வேண்டுமென சா்வதேச நிதியம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, இந்தியா-இலங்கை இடையிலான கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கான முதல் கட்ட பேச்சுவாா்த்தை செப்டம்பா் 16-இல் நடைபெற்றது. இலங்கைக்கு சா்வதேச நிதியம் கடனுதவி அளிக்க இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, கடன் மறுசீரமைப்பு ஆலோசகா் கிளிஃபா்ட் சான்ஸ் கூறுகையில், ‘தங்களுக்கு கடன் கொடுத்த நாடுகளிடம் இலங்கையின் பொருளாதார வளா்ச்சி, ஐஎம்எஃப் கடனுதவியின் நோக்கம், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடுத்தகட்ட நகா்வு குறித்து இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும். ஐஎம்எஃப் உடனான ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில் இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.