தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இலங்கையில் அவசர நிலை வாபஸ்: அதிபர் அறிவிப்பு

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

News image
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
Updated On :6 ஏப்ரல் 2022, 9:39 am

DIN


இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. நிலைமை நாளுக்குநாள் மோசமாக மாறுவதால் பொதுமக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

முக்கியமாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டை முற்றுகையிட்ட மக்கள் அவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரகால பிரகடனத்தை வாபஸ் பெறுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்றிரவு அறிவித்துள்ளார்.

முன்னதாக, இச்சட்டம் மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமை ஆணையக்குழு அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.