ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.79,000 கோடி) செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப்(james webb space telescope) எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது. இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படம்
இவற்றில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஏராளமான நட்சத்திர திரள்கள் காணப்படுகின்றன. புகைப்படத்தின் முன்பகுதியில் மாபெரும் நட்சத்திர திரள்களும், பின்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர திரள்களும் பிரகாசமாக ஒளிா்கின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகும் என நாசா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?
இந்த நிலையில், நேற்று நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றப் படத்தை வெளியிட்டுள்ளது. சூரியக் குடும்பத்தின் 5-வது கோளாகக் கருதப்படும் வியாழன், சூரியனிலிருந்து சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாகச் சுற்றி வருகிறது.
தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழனின் படம் திரவம்போல் காட்சியளிக்கிறது.
1. Make way for the king of the solar system!
â NASA Webb Telescope (@NASAWebb) August 22, 2022
New Webb images of Jupiter highlight the planet's features, including its turbulent Great Red Spot (shown in white here), in amazing detail. These images were processed by citizen scientist Judy Schmidt: https://t.co/gwxZOitCE3 pic.twitter.com/saz0u61kJG
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



