ராணுவத்தினர் 40 பேர், மக்கள் 10 பேர் பலி: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோரும், மக்களில் 10 பேரும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, ரஷிய ராணுவப் படைகள் உக்ரைனுள் நுழையத் தொடங்கின. தலைநகரில் பெரும் வெடி சத்தங்கள் எழுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், தாக்குதலில் ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டவர்களும், மக்களில் 10 பேரும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டைப் பாதுகாக்க விருப்பமுள்ள எவருக்கும் ஆயுதங்களைத் தர தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com