காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

உக்ரைனுக்கு ரூ. 4,500 கோடி நிதியுதவி: அமெரிக்கா ஒப்புதல்

ரஷியாவுக்கு எதிரான போர்ச்சூழலில் உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 7:17 am

DIN

ரஷியாவுக்கு எதிரான போர்ச்சூழலில் உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர்(4500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று முனைகளிலும் ரஷியா ஆக்ரோஷத் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. 

முன்னதாக, உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ. 4,500 கோடி ரூபாய். 

இதில், ராணுவ உதவிக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர்(ரூ. 1,875 கோடி) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர்(ரூ. 2,626 கோடி)  உதவி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.