
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.49 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வந்த நிலையில், சில நாள்களாக குறைந்து வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் சற்று மீண்டு வருகின்றனர். தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தாலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 434,979,168-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 5,963,946 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 36,50,49,418 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 6,39,65,804 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 76,608 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,560,293 -ஆகவும் பலி எண்ணிக்கை 972,930 ஆகவும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,16,117 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,13,756 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,44,050 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,48,989 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இதையும் படிக்க | புதினுக்கு பாராட்டு...ஜுக்கர்பெர்க் குறித்து சர்ச்சையான கருத்துகள்...டிரம்பின் சரவெடி உரை