கொண்டை ஊசி விற்று வீடு வாங்கிய இளம்பெண்

கொண்டை ஊசி விற்பனை செய்து ஈட்டிய வருமானத்தில்  அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 80 ஆயிரம் டாலர் மதிப்புள்ள இல்லத்தை வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் 56 லட்சமாகும்.
கொண்டை ஊசி விற்று வீடு வாங்கிய இளம்பெண்
Published on
Updated on
1 min read

கொண்டை ஊசி விற்பனை செய்து ஈட்டிய வருமானத்தில்  அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 80 ஆயிரம் டாலர் மதிப்புள்ள இல்லத்தை வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் 56 லட்சமாகும்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 30 வயதான டெமி ஸ்கிப்பர் என்பவர் டிக்-டாக் மூலம் பலராலும் பிரபலமாக அறியப்படுபவர். வர்த்தக நோக்கத்தில் அவர் டிக்-டாக் விடியோக்களை பதிவேற்றிவருகிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது வீட்டில் இருந்தபடியே அதிக அளவு நேரத்தை யூடியூபில் விடியோக்களைப் பார்ப்பதில் செலவிட்டுள்ளார். 

அப்போது டெட் எக்ஸ் டால்க்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வர்த்தகம் தொடர்பான சொற்பொழிவைப் பார்த்துள்ளார். அதனால் ஈர்க்கப்பட்ட அவர், டிக்-டாக் மூலம் வர்த்தகம் செய்யும் பாணியை கையாளத் தொடங்கினார். 

டிக்-டாக் விடியோக்களின் மூலம் கொண்டை ஊசிகளை விற்பனை செய்யத் தொடங்கினார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவரது பக்கத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

தற்போது ஆப்பிள் செல்போன், மினி கூப்பர் கார், டிராக்டர்கள் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். இதற்காக அந்தந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் ஸ்கிப்பர், அந்த நிறுவனத்தின் பொருள்களை தன்னுடைய டிக்-டாக் பக்கத்தில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறார்.

கொண்டை ஊசி விற்பனையில் தொடங்கிய இந்த முறை வர்த்தகத்தால் ஒன்றரை ஆண்டுகளில் சொகுசு கார் உள்பட தற்போது சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஊரடங்கில் வேலையிழந்தவர்களுக்கும், பெண்களுக்கு அவரது விடியோக்கள் ஊக்கம் தருபவையாக உள்ளதாக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com