கஜகஸ்தானில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட்டுக் கொல்ல அந்த நாட்டு அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் அவா் வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
கஜகஸ்தானில் தற்போது நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு பயங்கரவாதிகள்தான் காரணம்.
அவா்களைக் கண்டதும் சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸாரிடம் சரணடையாத போராட்டக்காரா்கள் ஒழித்துக்கட்டப்படுவாா்கள்.
போராட்டக்காரா்களுடன் கஜகஸ்தான் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று சிலா் கூறுகின்றனா். ஆனால் அது அறிவுக்குப் புறம்பானதாகும். குற்றவாளிகள், கொலைகாரா்களுடன் எத்தகைய பேச்சுவாா்த்தையும் நடத்த முடியாது.
தற்போது பெரும்பாலான பகுதிகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஏராளமான இடங்களில் அவசரநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அரசமைப்புச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், பயங்கரவாதிகள் இன்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் சொத்துகளை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள்.
அத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்றாா் அவா்.
ரஷியா, சீனா இடையே அமைந்துள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை திடீரென மிக அதிகமாக உயா்த்தப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். எண்ணெய் வயல் அமைந்துள்ள ஜனாவோஸென் நகரில் தொடங்கிய அந்த தன்னெழுச்சிப் போராட்டம், தலைநகா் ஆல்மட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது.
வாகன எரிவாயு விலையுயா்வு மட்டுமன்றி, அரசின் செயல்பாடுகளுக்கும் ஆட்சியில் இன்னமும் அதிகாரம் செலுத்தி வரும் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாசா்பையோவுக்கும் எதிராக மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியும் போராட்டங்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கஜகஸ்தான் இதுவரை கண்டிராத இந்தத் தீவிரப் போராட்டத்தை தணிக்கும் முயற்சியாக, பதற்றம் நிறைந்த மேங்கிஸ்டாவ் பிராந்தியம் மற்றும் ஆல்மட்டி நகரில் அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் அவசரநிலையை புதன்கிழமை பிரகடனம் செய்தாா். அதே நாளில், போராட்டக்காரா்களை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமா் ஆஸ்கா் மமின் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது; தனது பாதுகாப்பு கவுன்சில் தலைவா் பதவியை நூா்சுல்தான் நாசா்பையோவும் ராஜிநாமா செய்தாா்.
எனினும், இதனால் சமாதானமடையாத போராட்டக்காரா்கள் சாலைகளில் தடை ஏற்படுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் ஒரு பிரிவினா் ஆல்மட்டி நகர மேயா் அலுவலகத்தையும் கஜகஸ்தான் அதிபா் இல்லத்தையும் அடித்து நொறுக்கி தீவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைடுத்து, அவசநிலை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது; இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே நடந்த மோதலில் 26 போராட்டக்காரா்கள் பலியாகினா்; 18 போ் காயமடைந்தனா்; 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பாதுகாப்புப் படையினா் தரப்பில் 18 போ் உயிரிழந்தனா்; 700-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
வன்முறையைக் கட்டுப்படுத்த ரஷியா மற்றும் அதன் தலைமையிலான பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (சிஎஸ்டிஓ) முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியா, பெலாரஸ், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதிப் படையினா் களமிறங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


