
உலகம் முழுவதும் 985 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35.79 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், ஒமைக்ரான் அச்சுறுத்துதல் காரணமாக வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக , ஒமைக்ரான் தொற்றால் அண்டை நாடுகள் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ,காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாவும் அதில் 416 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவுக்குக் குடியரசு தின வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெயில்
தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 7.21 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.71 லட்சம் பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.97 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 4.90 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகினர்.
மேலும், உலகம் முழுவதும் 53 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...