பிரபஞ்சத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
பிரஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவதற்கான முயற்சியிலிருக்கும் நாசா, விண்வெளியில் 10 பில்லியன் டாலர்(ரூ.79,000 கோடி) செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை(The James Webb Space Telescope) நிறுவியுள்ளது.

இதன் மூலம் நாசா, பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஒளி ஆண்டுகளாக பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களைத் தொகுத்து புகைப்படமாக வெளியிட்டு வருகிறது.
அதன் முதல் படமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை ஒன்றிணைத்து புதிய வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டது.

பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதால் தொலைநோக்கியில் 13 பில்லியன் ஆண்டுகள் வரையிலான கதிர்கள் பதிவாகி உள்ளதால் கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை நெருங்கிவிட்டோம் என பல விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: உலகை வியப்பில் ஆழ்த்திய தொலைநோக்கி: யார் இந்த ஜேம்ஸ் வெப்?

இந்நிலையில், நாசா மேலும் சில அற்புதமான படங்களை வெளியிட்டுள்ளது. இவையும் பிரபஞ்சத்தின் தோற்றத்திலிருந்து பயணப்பட்டு வரும் ஒளிக்கதிர்களாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,700 கோடி டாலராக அதிகரிப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



