உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இலங்கை அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

இலங்கை அரசு தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

படம்: ரூபாவஹினி யூடியூப்

Published On :

இலங்கை அரசு தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தில் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபட்ச தனது பதவியை இன்று ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, இன்று அதிகாலை இலங்கையிலிருந்து ராணுவ விமானம் மூலம் மாலத்தீவு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கோத்தபய தப்பிச் செல்ல உதவியதாக பிரதமர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே இலங்கை அரசு தொலைக்காட்சியான ஜாதிகா ரூபாவஹினி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதிபர் பதவியை ராஜிநாமா செய்யாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்தது இலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.