என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

இலங்கை இடைக்கால அதிபராக ரணிலை நியமித்தார் கோத்தபய

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்து கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.

News image

ரணில் விக்கிரமசிங்க

Updated On :13 ஜூலை 2022, 1:47 pm IST

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக நியமித்து கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இன்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளதாக அந்நாட்டின் அவைத் தலைவர் மகிந்த யப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.

அதிபர் கோத்தபய ராஜபட்ச தப்பிச் சென்றதற்கு உதவியதாக கூறி பிரதமர் ரணிலை உடனடியாக பதவி விலகக் கோரி அவரின் அலுவலகத்தின் முன்பு இன்று காலை முதல் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், அதிபர் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யாமல் இடைக்கால அதிபரை நியமனம் செய்தது இலங்கை அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.