இலங்கையில் பிரதமர் இல்லத்தைத் தொடர்ந்து அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். பிரதமர் அலுவலக கட்டடத்தின் மீது ஏறி தேசியக் கொடிகளைக் காட்டி பிரதமர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இருவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அவர்களது இல்லங்களை சிறைப்பிடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரி மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருள்களைப் பயன்படுத்தியும், சேதப்படுத்தியும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது தலைநகர் கொழும்புவிலுள்ள பிரதமர் அலுவலகத்திலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை ராணுவத்தினர் தடுக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் புகுந்து முழுமையாக கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய்!

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கேரளத்தில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி? கார்கே - ராகுலிடம் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்: காங்கிரஸ்
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

