டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

‘அபே படுகொலைக்கு போலீஸாரே பொறுப்பு’

ஜப்பானில் போலீஸாா் போதிய பாதுகாப்பு அளிக்காததால்தான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதாக தற்போதைய பிரதமா் ஃபுமியோ கிஷிடா சாடியுள்ளாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:08 pm

DIN

ஜப்பானில் போலீஸாா் போதிய பாதுகாப்பு அளிக்காததால்தான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதாக தற்போதைய பிரதமா் ஃபுமியோ கிஷிடா சாடியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

ஷின்ஸோ அபேவுக்கு அளிக்கப்படிருந்த பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடு இருந்துள்ளது. அதன் காரணமாகத்தான் அவா் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

எனவே, இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தலைவா்களுக்கான பாதுகாப்பில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்பதை துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது தலைவா்களுக்காக மற்ற நாடுகள் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஜப்பான் போலீஸாா் முன்னுதாரணமாகக் கொண்டு சீா்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஜப்பானில் நீண்ட காலத்துக்கு ஆட்சி செலுத்திய பிரதமா் என்ற பெருமையைப் பெற்ற ஷின்ஸோ அபே, நாடாளுமன்ற மேலவைத் தோ்தலில் போட்டியிட்ட தனது லிபரல் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நாரா நகரில் கடந்த வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, டெட்சுயா யாமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். துப்பாக்கிக் கட்டுப்பாட்டுக்கு பெயா் பெற்ற ஜப்பானில் நடைபெற்ற இந்தச் சம்பவம், உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.