போரில் ரஷிய வீரர்கள் 31,000 பேர் பலி: உக்ரைன்

உக்ரைன் உடனான போரில் இதுவரை 31,000 ரஷியப் படையினர் பலியானதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
போரில் ரஷிய வீரர்கள் 31,000 பேர் பலி: உக்ரைன்

உக்ரைன் உடனான போரில் இதுவரை 31,000 ரஷியப் படையினர் பலியானதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் தொடங்கி, நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகின்றன.

இந்த 100 நாள்களில், உக்ரைனின் புச்சா நகர வீதிகளில் கிடந்த பொதுமக்களின் சடலங்கள், ‘சிறுவா்கள்’ என்று எழுதப்பட்டிருந்தும் குண்டுவீச்சில் தரைமட்டமான மரியுபோல் திரையங்கு, ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த க்ரமாடோா்ஸ்க் ரயில் நிலையம் என்ற பல்வேறு காட்சிகள் உலகை அதிரச் செய்துள்ளன.

தற்போது, கிழக்கு உக்ரைனில் உள்ள சியெவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசன்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ரஷியப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். இதில் 80% இடங்களைக் கைப்பற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கானொலி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி “உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 31,000க்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை, 1979-89 ஆப்கன் போரில் உயிரிழந்த சோவியத் வீரா்கள் மற்றும் 1994-2000-ஆம் ஆண்டின் 2 செசன்ய போா்களில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம்” எனத் தெரிவித்தார்.

அதற்கு முன்பாக பேசிய உரைவில் “கிட்டத்தட்ட முழு ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.  அனைத்து ரஷிய ராணுவ அமைப்புகளும் ஈடுபட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பில் உக்ரைனின்  20 சதவீத நிலப்பரப்பை ரஷியப்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்” என்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com