கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், நிபந்தனையின்றி தங்களது பணியிடத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது. 
கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்
கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், நிபந்தனையின்றி தங்களது பணியிடத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தங்கள் ஊழியர்களுக்கு கூகுள் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடகாம கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக நகரங்களில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தில் உலகம் முழுவதும் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டாலும், அது பெண்களின் அடிப்படை உரிமையாக இருந்து வந்தது. அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் உரிமையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பினால், நிபந்தனையின்றி தங்களது பணியிடத்தை அவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என கூகுள் அறிவித்துள்ளது.

அதன்படி, கூகுளின் தலைமை அதிகாரி ஃபியோனா சிக்கோனி கூகுள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவலை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கருக்கலைப்பு செய்ய விரும்பும் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களை மாற்றிக்கொள்ளலாம். ஊழியர்களின் நலன் கருதி, முக்கியமாக பெண்களின் நலன், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு எதிர்காலம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com