உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

மீட்புப் பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு
உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

மீட்புப் பணிக்காக, மனிதாபிமான அடிப்படையில், உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, 2 நகரங்களில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, வோல்னோவாகா மற்றும் மரியுபோல் நகரங்களில், தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க... மிரட்டும் ரஷிய படை அணிவகுப்பு: கிலியில் கீவ் நகரம்

பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப் பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக இந்த போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

அதேவேளையில், உக்ரைனின், சுமி, கீவ், செர்னிஹிவ் ஆகிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுவதற்கான எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 10வது நாளாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டு உள்ளூர் நேரப்படி,  காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி 11.30  மணிக்கு) போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வகையில் ரஷியா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை உக்ரைன் தரப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. மாணவர்களை மீட்கும் பணிக்காக, போரை நிறுத்துமாறு இந்தியா தரப்பில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றிய ரஷியா

உக்ரைனில் அணுமின் நிலைய கட்டடத்தின் மீது ரஷியா நேற்று நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் அந்தக் கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்திலிருந்து கதிா்வீச்சு எதுவும் வெளியாகவில்லை என ஐ.நா. மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனின் எனா்ஹோடா் நகரில் உள்ளது சப்போரிஜ்ஜியா அணுமின் நிலையம். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இதன் மீது ரஷிய படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தினா். இதில் அணுமின் நிலையத்தில் உள்ள பயிற்சி மைய கட்டடம் பலத்த சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்தத் தாக்குதலில் உக்ரைன் படையினா் மூவா் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா் என உக்ரைன் அரசு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டடத்தில் பற்றிய தீயை தீயணைப்பு வீரா்கள் உடனடியாக அணைத்தனா்.

இதையடுத்து, ரஷிய படையினா் அந்த அணுமின் நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும், அணுமின் நிலைய பணியாளா்கள் தொடா்ந்து பணியாற்ற ரஷிய படையினா் அனுமதித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கதிா்வீச்சு இல்லை: முன்னதாக, ராக்கெட் குண்டு அணுமின் நிலையத்தின் மீது நேரடியாக தாக்கியதாக அணுமின் நிலைய செய்தித் தொடா்பாளா் உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தாா். அணுஉலைகளில் தீப்பற்றியதாகவும் அவா் கூறியதால் கதிா்வீச்சு அபாயம் குறித்த கவலை எழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com