இலங்கையில் உச்சமடையும் பொருளாதார நெருக்கடி: தாள்கள் பற்றாக்குறையால் தேர்வுகள் ஒத்திவைப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி சரிவால், இலங்கை கடுமையான பொருளாாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக கடந்த சில தினங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் தொடங்கி இதர பொருள்கள் வரை இறக்குமதியை அந்நாடு சார்ந்துள்ளதால் அந்நாடு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தாள்கள் மற்றும் மை பற்றாக்குறையால் பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதற்கு அந்நாட்டின் கல்வி அமைப்புகள் அரசுக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் தடைபட்டு வரும் அதேசூழலில் பால் பவுடர், சர்க்கரை, பருப்பு மற்றும் அரிசியைப் பெற மக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் காத்தி நிற்கின்றனர்.

முன்னதாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு இலங்கைக்கு ரூ.7500 கோடி கடனுதவி அளிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com