சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

இலங்கைக்கு புதிய பிரதமர்: அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு

இலங்கைக்கு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாகவும் மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச

Published On :

இலங்கைக்கு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாகவும் மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சிக்கல் காரணமாக உணவு உள்ளிட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கைக்கு இந்த வாரத்தில் புதிய பிரதமரும், அமைச்சரவையும் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அமைதிக்குத் திரும்ப வேண்டும் எனவும், நாடு திடமான நிலையை எட்டியவுடன் அதிபருக்கான அதிகாரங்கள் குறைத்துக் கொள்ளப்படும் எனவும் மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.