படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி: இலங்கை

தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி: இலங்கை

Published On :

கொழும்பு: எரிபொருள் பற்றாக்குறையை போக்கும் வகையில், இலங்கை அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிப்பதில் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் இருக்கும் நிலையில், இலங்கையின் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இந்த அனுமதியை வழங்கியுள்ளார். 

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றால் அந்நாட்டுப் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சவைத் தவிர இதர அனைத்து அமைச்சா்களும் கடந்த ஏப்ரல் மாதம் ராஜிநாமா செய்தனா். அதன் பின்னா், மக்கள் போராட்டம் தீவிரமாகியதால் கடந்த மே 9-ஆம் தேதி பிரதமா் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த மே 12-ஆம் தேதி பதவியேற்றாா். அதன்பின், பல்வேறு துறைகளுக்கு அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமித்தார்.

இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.