மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

"அமெரிக்கா வீசும் எலும்புத் துண்டுக்காக...”: தென்கொரிய அதிபரை விமர்சித்த கிம்மின் சகோதரி

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

News image
கிம் யோ ஜாங்
Updated On :24 நவம்பர் 2022, 12:53 pm

DIN

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துவருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ராணுவப் பயிற்சி இந்த சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் தென்கொரிய அதிபரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு நடந்துவரும் தென்கொரிய அதிபர் ஒரு முட்டாள் என விமர்சித்துள்ள அவர் அமெரிக்கா வீசும் எலும்புத் துண்டுகளுக்காக அவர் குரைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வடகொரியா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த தென்கொரியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அவர் முட்டாள்கள் தொடர்ந்து அபாயமான சூழலை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களாக வடகொரியா நடத்திவந்த ஏவுகணை சோதனைகளை கண்டிக்கும் விதமாக புதிய தடைகளை தென்கொரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.