83 ஏவுகணைகளை வீசிய ரஷியா: உக்ரைன் விமானப்படை தகவல்

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று(திங்கள்கிழமை) காலை 83 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
83 ஏவுகணைகளை வீசிய ரஷியா: உக்ரைன் விமானப்படை தகவல்

உக்ரைன் தலைநகர் கீவில் இன்று(திங்கள்கிழமை) காலை 83 ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. 

மேலும், தாங்கள் பின்வாங்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றவிருப்பதாக ரஷியா சூளுரைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷியா இவ்வாறு அறிவித்த நிலையில், இன்று(திங்கள்கிழமை) காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்ச்சியாக பலமுறை நடைபெற்றுள்ளதாக கீவ் மேயர் தகவல் தெரிவித்தார். 

இன்று காலை ரஷியா 17 ட்ரோன்கள் மூலமாக 83 ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் அவற்றில் 43 ஏவுகணைகள் உக்ரைனின் ஆயுதப் படைகளால் வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார். 

கீவின் ஷெவ்சென்ஸ்கிவ்ஸ்கி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் இன்றைய ரஷியாவின் கோரத் தாக்குதலையடுத்து அங்கு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஜி7 தலைவர்களிடம் பேசவிருக்கிறார். மேலும் ரஷியாவின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com