மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம்

மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டன் ராணி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது. 

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளை தங்களது காலணி நாடுகளாக பயன்படுத்தி வந்த பிரிட்டன் நாட்டின் ராணி மறைவிற்கு அரசு துக்கம் அனுசரித்ததற்கு ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மன்னராட்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 

ஆஸ்திரேலியாவின் 4 முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நவீன காலத்தில் மன்னராட்சி முறை தொடர்வது அவமானகரமானது எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com