தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாகிஸ்தானில் வேன் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 20 பேர் பலி

பாகிஸ்தானில் டீசல் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 20 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 11:29 am

DIN

பாகிஸ்தானில் டீசல் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதி தீப்பிடித்ததில் 20 பேர் பலியானார்கள். 
பாகிஸ்தானில் 40 பயணிகளுடன் பேருந்து ஒன்றி கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிண்டி பட்டியான் அருகே டீசல் பீப்பாய்களை ஏற்றி வந்த வேன் மீது இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 
பேருந்து மோதி வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் காயமடைந்தனர். நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு பிண்டி பட்டியான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.