இஸ்ரேலின் தாக்குதலில் தெற்கு காஸா!
9 வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் போர் நிறுத்தத்துக்கான நம்பிக்கை குறைந்து வருகிறது.


பாலஸ்தீன மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வசிக்கும் தெற்கு காஸா பகுதியில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது இஸ்ரேல்.
சனிக்கிழமை தெற்கு காஸாவின் சுற்று வட்டாரங்களில் மக்களை இடம்பெயர எச்சரித்து துண்டு பிரசுரங்களை இஸ்ரேல் ராணுவம் வீசியுள்ளது.
இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் காஸாவில் வாழும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தபோதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
7 வாரங்களாகத் தொடர்ந்த போர் நவ. 24 முதல் 7 நாள்களுக்கு கைதிகளைப் பரஸ்பரம் விடுவிக்க இருதரப்பும் உடன்பட்டு போர் நிறுத்தம் நடைபெற்றது. மீண்டும் போர்த் தொடங்கியுள்ள நிலையில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகக் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி இடம்பெயரும் பாலஸ்தீன மக்கள் | AP
மேலும், மற்றுமொரு பெரியளவிலான மக்கள் இடப்பெயர்வு ஏற்படாதிருக்க அமெரிக்கா மற்றும் ஐநா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
துபையில் நடைபெற்ற காப்28 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், “அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுகின்றனர். வெளிப்படையாக சொல்லப் போனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் காஸாவில் இருந்து வருகிற புகைப்படங்களும் விடியோகளும் நிலைகுலைய வைக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
போர் மீண்டும் தொடங்கியது முதல் 400-க்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியுள்ளது இஸ்ரேல். தெற்கு காஸாவில் 50-க்கும் அதிகமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதல் 15,200-ஐ கடந்தது காஸா உயிரிழப்பு
ஜபாலியாவில் நடந்த தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...