கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஜப்பானைத் தவிர உலகின் அனைத்து இடங்களிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
ஐமேக்ஸ் திரையரங்குகள் இந்த படத்தை எடுக்க விரும்பாததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. அந்த நேரத்தில் வெளியான 'பார்பி' திரைப்படத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் நடந்த அணுகுண்டு தாக்குதலை சிறுமைப் படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் படம் திரையிடப்படாததற்குக் காரணமாகக் கருதப்பட்டன. பேச்சுவார்த்தைகள் எதுவும் நல்ல முடிவைத் தராத நிலையில் ஜப்பானைத் தவிர எல்லா இடங்களிலும் ஓப்பன்ஹெய்மர் வெளியானது.
இதையும் படிக்க: ஐ.நா சட்டப் பிரிவு-99 : ஏன் மற்றும் எதற்கு?
கிறிஸ்டோபர் நோலன் இரண்டாம் உலகப்போரில் நடந்த முதல் அணுகுண்டு தாக்குதலில் ஜப்பான் மக்கள் பட்ட இன்னல்களை மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன.
இந்த நிலையில் ஓப்பன்ஹெய்மர் அடுத்த ஆண்டு ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகும் எனத் திரைப்படத்தின் வெளியீட்டாளர் பிட்டர்ஸ் என்ட் தெரிவித்துள்ளார். 'அணுகுண்டு தயாரிப்பில் ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த முக்கிய பங்கின் மீதான தார்மீகக் குழப்பத்தை மையமாக வைத்த இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜப்பானில் வெளியாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீட்டுத் தேதி!

ஸ்ரீலீலா ஸ்டில்ஸ்!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டார்! - உறுதி செய்தார் அதிபர் பெஷேஷ்கியன்!

பின்வாங்குவதோ சரணடைவதோ கிடையாது... சாம்பியன்ஸ் லீக்கின் ஸ்பார்டன் - ரியல் மாட்ரிட்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

