இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது மாதத்தைத் தொட்டுள்ள நிலையில், பாலஸ்தீன போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு செயலிழந்துவிட்டதாகவும், ஹமாஸ் போராளிகள் சரணடைந்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவந்த நிலையில், பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய இந்தத் தாக்குதல் ஹமாஸ் அமைப்பு இன்னும் செயலிழக்கவில்லை என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இரண்டு மாதகாலமாக நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால் காஸாவில் 18,600க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான இடமாக இஸ்ரேல் கூறிய தெற்குப் பகுதிகளும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளன.
பாதுகாப்பான இடம் என எதுவும் இல்லாத நிலையில் லட்சக்கனக்கான மக்கள் பசியுடனும், காயங்களுடனும், நோய்கள் எளிதாக பரவிவரும் சூழலிலும் துன்புற்றுவருகின்றனர்.
சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்துமாறு இஸ்ரேலை அறிவுருத்திவருகின்றன. எனினும், எந்தக் காரணத்தைக் கொண்டும் போரை நிறுத்துவதாக இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


