ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எகிப்தில் ஹமாஸ் தலைவர்: பேச்சுவார்த்தை பலனளிக்குமா?

பத்து வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்துவரும் போரில் மத்தியஸ்தம் செய்துவரும் நாடுகள் இருதரப்புக்கிடையேயும் பேசி வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை பலனளிக்குமா?

News image
ராஃபா எல்லையின் உணவுக்காகக் காத்திருக்கும் பாலஸ்தீனர்கள் | AP
Updated On :20 டிசம்பர் 2023, 1:02 pm

DIN


ஹமாஸின் முதன்மை தலைவர்களில் ஒருவரான முகமது ஹனியே, நடைபெற்றுவரும் இஸ்ரேல் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தப் பேச்சுவார்த்தை மற்றுமொரு தற்காலிக போர் நிறுத்தம், பரஸ்பர கைதிகள் விடுவிப்புக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.

இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 85 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகியது.

இஸ்ரேல் அக்.7 தாக்குதலைச் சுட்டிக்காட்டி ஹமாஸை ஒட்டுமொத்தமாக தடை செய்ய உலக நாடுகளைக் கோரியது.

இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த கட்டிடம் | AP

இஸ்ரேல் தாக்குதலால் சிதைந்த கட்டிடம் | AP

கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்தத்துக்கும் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதன்கிழமை, ஜபாலியா முகாமில் இஸ்ரேலின் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா பகுதியில் வாழ்வாதார உதவிகளை அதிகப்படுத்தக் கோரிய ஐநா தீர்மானம் அமெரிக்காவின் தாமதத்தால் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.