வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கட்டுமான பணிகளுக்கு இந்தியர்களை அழைத்துச் செல்லும் இஸ்ரேல்!

போரின் காரணமாக ஏற்கெனவே வேலை செய்த பாலஸ்தீன கட்டுமான தொழிலாளர்கள் பணி அனுமதி திரும்ப பெறப்பட்ட நிலையில் உருவான பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2023, 11:23 am

DIN

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையில் நிலவுகிற கடும் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்யக் குழுக்கள் இந்தியாவுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

சென்ற வாரம் தேர்வுக் குழு வந்துசென்ற பிறகு, அடுத்த வாரம் அதிகாரமட்டத்திலான குழுவினர் வரவுள்ளனர்.

இஸ்ரேலிய கட்டுமான கூட்டமைப்பின் தலைவர் ஷே பாஸ்னர், ”தில்லி மற்றும் சென்னையில் அடுத்த வாரம் டிச.27 முதல் இதற்கான ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம். முதல்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் அரசின் அறிவுறுத்தல்படி பணிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் இதன் மேம்பாட்டைப் பொறுத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் வரை இந்தளவு அதிகரிக்கலாம். மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடைபெறக்கூடியது இது. அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் தேர்வுப் பணி 10 முதல் 15 நாள்களுக்குத் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மேற்குக் கரை மற்றும் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீன தொழிலாளர்கள் பெருமளவில் இஸ்ரேலில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். போரின் காரணமாக அவர்களின் வேலைக்கான அனுமதி திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பணிகள் இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.