ஐ.நா. தீர்மானம்: அமெரிக்கா கால தாமதம் செய்வது ஏன்?

காஸாவில் வாழ்வாதார உதவிகளுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கான வாக்களிப்பில் அமெரிக்கா கால தாமதம் செய்து வருகிறது. அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?
ஜோ பைடன் | AP
ஜோ பைடன் | AP

அமெரிக்கா, கூட்டணி நாடுகள் மற்றும் அரபு தேசத்தின் அதிகாரிகள் இடையே மேல்மட்டளவிலான பேச்சுவார்த்தை தொடர்ச்சியாகக் காஸாவை முன்னிட்டு நடைபெற்று வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையில் அரபு நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட, காஸாவில் தடையின்றி வாழ்வாதார உதவிகளை அளிக்கும் தீர்மானத்தில் அமெரிக்கா வாக்களிக்க தாமதித்து வருகிறது.

முந்தைய போர் நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது.

இந்த முறை, தீர்மானக் உரையில் குறிப்பிடப்பட்ட போர் நிறுத்தம் மற்றும் காஸாவுக்குள் வாழ்வாதார பொருள்கள் நுழைவதற்கான சோதனை ஆகியவை குறித்த பரிந்துரைகளைத் திருத்த அமெரிக்கா கோரி வருகிறது.

தற்போது இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாழ்வாதார பொருள்கள் காஸாவுக்குள் நுழைவதற்கான சோதனையைத் தளர்த்தி அதனை ஐநா கவனிப்பதாகக் குறிப்பிடும் பரிந்துரை மீது அமெரிக்கா அதிருப்தி கொண்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது,  “நாங்கள் ஏற்றுக் கொள்ளும் வரையறைகள் குறித்து ஐநாவிடம் பேசிவருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு தேசத்தின் தூதுவர் லானா நுஸீபே, “இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதையும் களத்தில் பயனளிப்பதையும் பார்க்க விருப்பப்படுகிறோம்.  கூடுதல் ராஜ்ய விவகாரத்துக்கான நேரம் கொடுத்தால் சாதமான பலன் கிடைக்கும் என நம்புகிறோம்” என தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு தள்ளிப் போவதைக் குறித்து அவர் தெரிவித்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com